பொது செய்தி

தமிழ்நாடு

வாங்கும் போது இனிக்குதாம் கொடுக்க மட்டும் கசக்குதாம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

மேலுார் : அலங்காநல்லுார் சர்க்கரை ஆலை ஏற்பாட்டின்படி உடுமலைபேட்டை அமராவதி ஆலைக்கு அனுப்பிய கரும்பிற்குரிய பணத்தை 5 மாதங்களாகியும் தர மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

மேலுார் பகுதியில் விளைந்த கரும்புகளை விற்க அலங்காநல்லுார் சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் பதிவு செய்தனர். ஆனால் ஆலை இயக்க போதுமான கரும்பு பதிவாகவில்லை எனக்கூறி உடுமலை பேட்டை அமராவதி தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு நிர்வாகம் அனுப்பியது. விவசாயி தவமணி: ஆலைக்கு கரும்பு அனுப்பிய 14 நாட்களுக்குள் பணம் வழக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பணம் பட்டுவாடா செய்யும் நாள் வரை விவசாயிகளுக்கு 15 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என்பது விதி.

ஆனால் ஆலை நிர்வாகம் 5 மாதமாகியும் பணம் கொடுக்கவில்லை. அதனால் வங்கி கடனுக்கான வட்டி அதிகரித்து கொண்டே செல்கிறது என்றார்.அலங்காநல்லுார் ஆலை நிர்வாகி கோபால்சாமி கூறுகையில், 'ஒரு வாரத்தில் பணம் வாங்கி தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X