பொது செய்தி

தமிழ்நாடு

பிப்., வரை தலைமைச் செயலராக சண்முகமே நீட்டிப்பு: பல மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 பிப்., வரை  தலைமைச் செயலராக சண்முகமே நீட்டிப்பு: பல மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு

தமிழக அரசின் தலைமைச் செயலர், கே.சண்முகத்தின் பணிக் காலம், 2021ம் ஆண்டு பிப்., வரை நீட்டிக்க, மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. இதைத் தவிர, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிடங்களில் பல மாற்றங்களை மேற்கொள்ள, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலராக இருந்த, கிரிஜா வைத்திய நாதன் பணி ஓய்வுக்குப் பின், 46வது தலைமைச் செயலராக, கடந்தாண்டு ஜூலையில் பதவியேற்றார் சண்முகம்.சேலம் மாவட்டம், வாழப்பாடியில் பிறந்த இவர், கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்பு முடித்து, ஐ.ஏ.எஸ்., எனப்படும் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் வென்று, 1985ல், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியைத் துவக்கினார்.தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும்நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலர், நிதித் துறை செயலர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் இருந்தவர்.

பணி ஓய்வு பெற்றுள்ள அவர், ஏற்கனவே பணி நீட்டிப்பில் உள்ளார்.இந்த நிலையில், 'அவருடைய பணிக் காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்' என, முதல்வர் இ.பி.எஸ்., பரிந்துரைத்து உள்ளார்.இதை ஏற்ற மத்திய பணியாளர் நலத் துறை, அதற்கான கோப்புகளை, பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது.

தமிழக அரசின் பரிந்துரையை, பிரதமர் அலுவலகம் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டு உள்ளதாக தெரிகிறது.அதன்படி, 2021ம் ஆண்டு, பிப்., வரை, மூன்று மாதங்களுக்கு அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுகிறது. இதற்கான முறையான அறிவிப்பு, மிக விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப் படுகிறது.


புதிய மாற்றங்கள்

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்உட்பட அரசு ஊழியர்களின் பணித் திறனை மேம்படுத்தும் வகையில், 'கர்மயோகி' என்ற திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.கர்மயோகி திட்டம் அதிகாரப்பூர்வமாக, 'சிவில் சர்வீசஸ் திறன் மேம்பாட்டுக்கான தேசிய திட்டம்' என, அழைக்கப்படும்.

இத்திட்டம், மனிதவள நிர்வாகத்தை மாற்றியமைக்க உருவாக்கப்பட்டுள்ளது. 'விதிகள் அடிப்படையிலான நடைமுறைகளுக்கு பதிலாக, பணிகள் அடிப்படையிலான நடைமுறையை உருவாக்குவதே இதன் நோக்கம்' என, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை கூறியுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சந்திரமவுலி, இந்தத் துறையின் சிறப்புச் செயலராக உள்ளார்.பிரதமரின் மற்றொரு கனவுத் திட்டமான, கர்ம யோகி திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில், இந்தாண்டு ஓய்வு பெற உள்ள அவருடைய பணிக் காலமும் நீட்டிக்கப்பட உள்ளது.

இதுபோல, சில மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பணிக் காலத்தையும் நீட்டிக்கக் கோரி, தமிழக அரசு பரிந்துரைகளை அனுப்பியுள்ளது. அவற்றை, மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.தற்போது, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பற்றாக்குறை உள்ளது. மேலும், திறமையான அதிகாரிகளை தக்க வைக்கவும், மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, 1989 மற்றும் 1990ம் ஆண்டு பதவியேற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட உள்ளது. நாடு முழுதும், 176 அதிகாரிகள் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கு மத்திய அரசு துறைகளில் செயலர் பதவி வழங்கப்பட உள்ளது


.மத்திய அரசு பணி

வரும், டிச.,க்குள், இவர்களில் இருந்து, 65 பேர் மத்திய அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதில், தமிழகத்தைச் சேர்ந்த எட்டு பேருக்கு, மத்திய அரசின் செயலர்களாகும் வாய்ப்பு கிடைக்க உள்ளது.இதைத் தவிர, 1994 மற்றும் 1995ல், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக பதவியேற்றவர்களுக்கு, மத்தியஅரசில், கூடுதல் செயலர் பதவி வழங்கப்பட உள்ளது.

தற்போதைய நிலையில், 1994 மற்றும் 1995ல் பதவியேற்ற அதிகாரிகளுக்கு, இணைச் செயலர் பதவி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.மேலும், 2004ம் ஆண்டு பதவியேற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, மத்திய அரசில், உதவிச் செயலர்பதவிக்கு பதிலாக, இணைச் செயலர் பதவி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karthi - chennai,இந்தியா
13-செப்-202020:25:09 IST Report Abuse
karthi முதல் அமைச்சர் தனி பிரிவில் வருட கணக்கில் பதில் அளிக்காமல் புகார் மனுக்கள் நிலுவையில் உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X