பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனைக்கு 'எக்ஸ்ரே' கருவி பாண்டியன் எம்.எல்.ஏ., தகவல்

Added : செப் 13, 2020
Share
Advertisement

சிதம்பரம்; சிதம்பரம் அரசு பொது மருத்துவமனைக்கு எம்.எல்.ஏ., நிதியில் இருந்து மொபைல் எக்ஸ்ரே கருவிகள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பாண்டியன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:சிதம்பரம் நகரத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு சிதம்பரம் மற்றும் சுற்றியுள்ள சுமார் 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து சிகிச்சை பெறுகின்றனர். இது கொரோனா தொற்று சிறப்பு சிகிச்சை மையமாகவும் செயல்படுகிறது.இம்மருத்துவமனைக்கு மொபைல் எக்ஸ்ரே மற்றும் பாகர் மிஷின் தேவை என மருத்துவர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.4 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் மொபைல் எக்ஸ்ரே (Mobile X-Ray) மற்றும் பாகர் மிஷின் (Fogger Machine) வாங்கிட நிதி ஒதுக்கீடு கடிதத்தை கலெக்டரிடம் அளித்துள்ளேன்.அதன் அடிப்படையில் மருத்துவ உபகரணங்கள் உடனடியாக வாங்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். விரைவில் அந்த கருவிகள் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X