பொது செய்தி

தமிழ்நாடு

ராணுவ கல்லுாரியில் சேர விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் சந்திரசேகர சகாமுரி தகவல்

Added : செப் 13, 2020
Share
Advertisement

கடலுார்; டேராடூன் ராணுவ கல்லுாரியில் எட்டாம் வகுப்பில் சேர, வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் சந்திரசேகர சகாமுரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராணுவ கல்லுாரியில், ஜூலை- 2021ல் துவங்கும் 8ம் வகுப்பில் சேர மாணவர்கள் மட்டும் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தகுதி தேர்வு வரும் டிச.,1 மற்றும் டிச., 2ம் தேதிகளில் நடக்கிறது.நுழைவு தேர்வு எழுதும் மாணவருக்கு 01.07.2021 அன்று பதினொன்றரை வயது குறையாமலும்,13 வயது முடியாமல் இருக்க வேண்டும். ராணுவ கல்லுாரியில் மாணவர்கள் சேரும் போது 7ம் வகுப்பு படிப்பவராக அல்லது தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.தகுதியுடையவர்கள் விண்ணப்பம், விளக்கவுரை மற்றும் முந்தைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளின் கேள்வித் தாள்களை கட்டணம் செலுத்தி எழுத்து மூலமாக விண்ணப்பம் செய்து பெற்றுக் கொள்ளலாம். விலாசம் ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகளில் எழுதியிருக்க வேண்டும்.கட்டணம், ''the commandant RIMC, Dehradun'' என்ற பெயரில் stare Bank of India, Tel Bhavan, Dehradun (Bank code-01576) Uttarkhand ல் மாற்றத்தக்க வகையில் வரைவோலையாக பெற்று, THE COMMANDANT, RASHTRIYA INDIAN MILITARY COLLEGE, DEHRADUN, UTTARAKHAND STATE, PIN 248 003 என்ற முகவரிக்கு தனி நபர் விண்ணப்பதுடன் அனுப்ப வேண்டும்.தனியாக அச்சடிக்கப்பட்ட அல்லது நகல் எடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவினர் விரைவு தபாலில் பெற ரூ.600ம், அட்டவணை இனத்தவர் மற்றும் பழங்குடியினர் அதற்குண்டான ஜாதி சான்றிதழுடன் ரூ.555 செலுத்த வேண்டும். விண்ணப்பபடிவம் மற்றும் பிற விவரங்கள் மற்றும் முந்தைய ஆண்டு தேர்வுகளின் விடைத் தாள்களை பெற்றுக்கொள்ளலாம். டேராடூனில் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து, CONTROLLER OF EXAMINATIONS, TAMILNADU PUBLIC SERVICE COMMISSION, CHENNAI-600 003. என்ற முவகரியில் வரும் 30ம் தேதிக்குள் சென்று சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், www.rimc.gov.in என்ற இணையதள முகவரியில் இணையதள பணபட்டுவாடா மூலமும் விண்ணப்ப படிவம் பிற விவரங்கள் மற்றும் முந்தைய ஆண்டு தேர்வுகளில் கேள்வித்தாள்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு ராணுவ கல்லுாரி இணையதள www.rimc.gov.in மூலம் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X