பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் அறிவியல் நிலையம் ஊட்டச்சத்து தோட்டப் பயிற்சி

Added : செப் 13, 2020
Share
Advertisement

விருத்தாசலம்; விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் ஊட்டச்சத்து தோட்டம் மற்றும் பராமரிப்பு குறித்து பயிற்சி முகாம் நடந்தது.குறிஞ்சிப்பாடி அடுத்த சோனஞ்சாவடி கிராமத்தில் டாடா நிறுவனம் சார்பில் நடந்த பயிற்சிக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர்கள் நடராஜன், சுந்தரய்யா, மீனலட்சுமி, தொழில்நுட்ப வல்லுனர் (வானிலை) அருள்மதி பயிற்சியளித்தனர்.ஊட்டச்சத்து முக்கியத்துவம், ஊட்டச்சத்தில் காய்கறிகளின் பங்கு, ஊட்டச்சத்து தோட்டம் அமைத்தல், அதற்குரிய காய்கறிகள் குறித்து விளக்கம் தரப்பட்டது. தோட்டக் கலைப் பயிர்களின் மதிப்புக் கூட்டுதல், தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டது.பின்னர், வைரன்குப்பம் கிராமத்தில் காய்கறி தோட்டம் அமைத்தல் குறித்து செயல் விளக்கம் தரப்பட்டது. ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க தேவையான விதைகளை டாடா கெமிக்கல்ஸ் நிறுவன திட்ட அலுவலர் லட்சுமி வழங்கினார். ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X