சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் கம்பெனியில் திருட முயன்ற மூவர் கைது

Added : செப் 13, 2020
Share
Advertisement

கடலூர்: தனியார் கம்பெனியில் திருட முயன்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.கடலூரைச் சேர்ந்தவர் கண்ணன், 62; காயல்பட்டு என்.ஓ.சி.எல்., கம்பெனி தொழில்முறை ஆலோசகர். இவர் நேற்று பணியில் இருந்தபோது, குள்ளஞ்சாவடி அடுத்த ஆயிப்பேட்டையைச் சேர்ந்த பவுல்ராஜ், தனுசு, சிறுதொண்டமாதேவி ஜேம்ஸ் உள்ளிட்ட 20 பேர், கம்பெனியில் உள்ள இரும்பு பொருட்களை திருட முயன்றனர். கம்பெனி செக்யூரிட்டி பார்த்தவுடன் அனைவரும் ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் வழக்கு பதிந்து பவுல்ராஜ், 42; தனுசு, 55; ஜேம்ஸ், 42; ஆகியோரை கைது செய்து, தலைமறைவாக உள்ள 17 பேரை தேடி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X