சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முகக்கவசம் அணியாமல் சென்ற 52 பேரிடம் அபராதம் வசூல்

Added : செப் 13, 2020
Share
Advertisement

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பத்தில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 52 பேரிடம் நகராட்சி அதிகாரிகள் அபராதம் வசூலித்தனர்.நெல்லிக்குப்பம் நகராட்சி துப்புரவு அலுவலர் சக்திவேல் தலைமையில் ஊழியர்கள் போலீஸ் நிலையம் அருகே நேற்று காலை கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது முகக்கவசம் அணியாமல் வாகனத்தில் செல்பவர்களை நிறுத்தி அபராதம் விதித்து, முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கினர். நேற்று மட்டும் முகக்கவசம் அணியாமல் வந்த 52 பேரிடம் தலா ரூ. 200 வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X