அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிப்பு

Added : செப் 13, 2020
Share

வேப்பூர்; நல்லுார் ஒன்றிய அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது.நல்லுார் ஒன்றியத்தில் வேப்பூர், நல்லுார், சேப்பாக்கம், பெரியநெசலுார், நகர் உட்பட 64 ஊராட்சிகள் உள்ளன. ஒன்றியத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்க பி.டி.ஓ.,க்கள் உத்தரவிட்டனர்.நலலுாரில் ஊராட்சி தலைவர் புஷ்பா குமரேசன் தலைமையில், ஒன்றிய அலுவலகம், ஊராட்சி அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம்,சார் பதிவாளர் அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளித்தனர்.வேப்பூரில் ஊராட்சி தலைவர் மகேஸ்வரி திருஞானம் தலைமையிலும், சேப்பாக்கத்தில் ஊராட்சி தலைவர் தெய்வானை தீனதயாளன் தலைமையிலும், நகரில் ஊராட்சி தலைவர் சங்கர் தலைமையிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. ஊராட்சி செயலர்கள் திருநீலமணிகண்டன், வெங்கடேசன், சரவணன், தங்கவேல் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X