சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு முதுநகரில் பா.ம.க., மறியல்

Added : செப் 13, 2020
Share
Advertisement

கடலுார்; கடலுார் முதுநகரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க., சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

கடலுார், முதுநகர் மணிகூண்டு அருகில் டாஸ்மாக் கடை புதிதாக நேற்று காலை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதை கண்டித்து பா.ம.க., மாநில துணைப் பொதுச் செயலர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில், மாவட்ட செயலர் கோபிநாத், நகரத் தலைவர் மதி, ராம்கி, ராமமூர்த்தி, ஜெகன், ராஜேஷ், ரமேஷ், சதீஷ் உட்பட 40க்கும் மேற்பட்டோர் காலை 11:30 மணிக்கு டாஸ்மாக் கடை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.டி.எஸ்.பி., சாந்தி தலைமையில் முதுநகர் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.இதனையேற்று போராட்டத்தை கைவிட்டு 11:45 மணிக்கு கலைந்துச் சென்றனர். மறியலால் கடலுார்-சிதம்பரம் சாலையில் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.மேலும் இங்கு டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து காலை 9:30 மணிக்கு அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தமிழ்நாடு மக்கள் சட்ட விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் நலச்சங்க மாநில பொதுச் செயலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 27 பேர் மீது முதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X