பொது செய்தி

தமிழ்நாடு

மணல் குவாரியை மூடக்கோரிதி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

கம்மாபுரம்; கம்மாபுரம் அருகே புதியதாக துவக்கிய மணிமுக்தாறு மணல் குவாரியை மூடக்கோரி, தி.மு.க.,வினர் கருப்பு கொடியேந்தி, ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கம்மாபுரம் அடுத்த வி.குமாரமங்கலம் மணிமுக்தாறில் குவாரி அமைத்து லாரியில் மணல் எடுக்கும் பணி நடக்கிறது. இதை கண்டித்து, வி.குமாரமங்கலம் பஸ் நிறுத்ததில், நேற்று காலை 10:00 மணியளவில், புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ., சரவணன் தலைமையில், கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.தெற்கு ஒன்றிய செயலர் ராயர், மாவட்ட துணை செயலர் ஞானமுத்து, கார்கூடல் ஊராட்சித் தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள் இளவரசன், ராமமூர்த்தி, கோபாலபுரம், கோ.ஆதனுார், விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.டி.எஸ்.பி., ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், கம்மாபுரம் சப்இன்ஸ்பெக்டர் டைமன் துரை, வருவாய் துறையினர், பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்பட்டதால் 10:30 மணியளவில் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X