பொது செய்தி

தமிழ்நாடு

அரசு இசைப்பள்ளியில் சேர்ந்து பயன் பெற கலெக்டர் அழைப்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement

கடலுார்; கடலுார் இசைப்பள்ளியில் சேர்க்கை நடந்து வருகிறது. இசை ஆர்வமுள்ள மாணவர்கள் சேர்ந்து பயன்பெறலாம் என கலெக்டர் சந்திரசேகர சகாமுரி கூறியுள்ளார்.அவரது செய்திக்குறிப்பு: கடலுார் மாவட்ட அரசு இசைப்பள்ளி கடந்த 1998 ஆண்டு முதல் பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பழைய பத்திர பதிவு அலுவலக கட்டடத்தில் இயங்குகிறது. இங்கு குரலிசை (வாய்ப்பாட்டு), நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் முதலிய ஏழு கலைகளில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி முழு நேரமாக கற்பிக்கப்படுகிறது. இசைப் பள்ளியில் சேர ஆண்டுக்கு ரூ. 152 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 13 வயது முதல் 25 வயதுக்குள் சேரலாம்.தற்போது 2020-2021ம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. இசைப் பள்ளி மணவர்களை ஊக்குவிக்க மாதந்தோறும் கல்வி உதவித்தொகை ரூ. 400 வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இங்கு படிப்பவர்களுக்கு இலவச பஸ் பாஸ், சலுகை கட்டணத்தில் ரயில் பயணம், அரசு விடுதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.மூன்றாண்டு படிப்பு முடித்த மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தால் தேர்வுகள் நடத்தி சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள மாணவர்கள் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X