பொது செய்தி

தமிழ்நாடு

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்ஆதிதிராவிடர் நலத்துறை கோரிக்கை

Added : செப் 13, 2020
Share
Advertisement

கடலுார்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி, கல்லுாரி விடுதி பணியாளர் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் கடலுாரில் நடந்தது.

கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் காந்தி முன்னிலை வகித்தார். அரசுப் பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் பங்கேற்று பேசினார்.அரசுப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் சிவக் குமார், மாவட்ட செயலர் விவேகானந்தன், முன்னாள் மாவட்ட பொதுச் செயலர்கள் குப்புசாமி, சீனுவாசன், முன்னாள் மாவட்ட செயலர் ராஜாமணி, டாஸ்மாக் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் சரவணன், சுந்தரமூர்த்தி பங்கேற்றனர். அரசு பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி, கல்லுாரி விடுதி துப்புரவு பணியாளர்களுக்கு தொகுப்பூதியத்தை ரத்து செய்து சிறப்பு கால முறை ஊதியம் வழங்கிய அரசின் முடிவை வரவேற்கிறோம். சமையலர், இரவு நேர காவலர்கள் காலி பணியிடங்களுக்கு, சிறப்பு கால முறை ஊதியம் பெறும் துப்பரவு பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு வழங்கி நிரப்ப வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X