பொது செய்தி

தமிழ்நாடு

குறிஞ்சிப்பாடியில் பா.ஜ.,மாவட்ட செயற்குழு கூட்டம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

குறிஞ்சிப்பாடி; குறிஞ்சிப்பாடியில் பா.ஜ., கடலுார் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.குறிஞ்சிப்பாடி செல்வாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் விஜயரங்கன், பாஸ்கர், அக்னி கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் வினோத், மாநில செயற்குழு உறுப்பினர் சுகுமார், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் குணா, மாநில பொதுக்குழு உறுப்பினர் குணா, சிவா உட்பட பலர் பங்கேற்றனர். மாநில பொதுச்செயலாளர் ராகவன் சிறப்புரையாற்றினார்.பிரதமர் மோடி பிறந்த நாளில், அவரது மக்கள் பணி மற்றும் சாதனைகள் குறித்து அனைத்து மக்களிடம் எடுத்துரைப்பது. முந்திரி, பலா பயிர்களுக்கு மாவட்டத்தில் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும். என்.எல்.சி நிறுவனத்துக்கு நிலம் வழங்கியோர் மற்றும் ஒப்பந்தப் பணியில் இருப்போருக்கு நிரந்த பணி வழங்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை மணிகண்டன் முன்மொழிந்தார். மாவட்ட துணைத்தலைவர் சிவக்குமார் வழிமொழிந்தார். குறிஞ்சிப்பாடி மண்டல தலைவர் நன்றி கூறினார். சமூக ஊடகப் பிரிவு தலைவர் கிஷோர் மற்றும் ஊடகப் பிரிவு தலைவர் ஸ்ரீதர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X