பொது செய்தி

தமிழ்நாடு

10 மையங்களில் இன்று 'நீட்' தேர்வு மாவட்டத்தில் 5,227 பேர் பங்கேற்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement
 10 மையங்களில் இன்று 'நீட்' தேர்வு மாவட்டத்தில் 5,227 பேர் பங்கேற்பு

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் இன்று நடக்கும் 'நீட்' தேர்வை 5,227 மாணவ, மாணவியர் எழுத உள்ளனர்.மத்திய அரசால் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று (13ம் தேதி) நடக்கிறது.

கடலுார் மாவட்டத்தில் 5, 227 பேர் தேர்வு எழுத உள்ளனர்.கடலுார் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி, சி.கே., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி, நெய்வேலி ஜவகர் பள்ளி, விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா மேல் நிலைப் பள்ளி உட்பட 10 மையங்களில் தேர்வு நடக்கிறது.தேர்வு மையங்களில் கிருமி நாசினி, பிளிச்சிங் பவுடர் தெளித்து சுத்தம் செய்யும் பணி, தேர்வு மைய நுழைவு வாயிலில் மாணவர்களை வரிசையாக அனுப்ப தடுப்புக் கட்டை அமைக்கும் பணி நேற்று நடந்தது. கொரோனா பரவலால் மாணவ, மாணவியர் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். உடல் வெப்ப நிலையை பரிசோதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வர்கள் உரிய நேரத்திற்கு மையத்திற்கு வர வேண்டும். வாட்ச் கட்டக் கூடாது. தகவல்களை பரிமாறும் செல்போன், புளூடூத் போன்ற சாதனங்களை கொண்டு வரக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X