சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 கோவில்களில்உண்டியலில் திருட்டு

Added : செப் 13, 2020
Share
Advertisement

சிதம்பரம்; சிதம்பரத்தில் நள்ளிரவில் இரண்டு கோவில்கள் உண்டியல் உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.சிதம்பரம் சுப்பிரமணியம் தெருவில் வல்லபிமாரியம்மன் கோவிலில் நேற்று முன் தினம் இரவு பூஜை முடித்து கோவில் பூட்டப்பட்டது. நள்ளிரவு மர்ம நபர்கள் கோவில் வாசல் கேட்டை உடைத்து உள்ளே புகுந்து, உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.இதேபோல் பதினாறுகால் மண்டபம் அருகே உள்ள சக்தி காளியம்மன் கோவில் கேட் பூட்டையும் உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். நேற்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள், உண்டியல் உடைந்து பணம் சிதறிக் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X