பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடை கட்டுமிடம்: எம்.எல்.ஏ., பார்வை

Added : செப் 13, 2020
Share
Advertisement

விருத்தாசலம்; குருவன்குப்பம் கிராமத்தில் ரூ.13 லட்சம் மதிப்பில், புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டும் இடத்தை கலைச்செல்வன் எம்.எல்.ஏ., பார்வையிட்டார்.

விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் இல்லாததால், சமூக நலக்கூட வளாகத்தில் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ரேஷன் கடைகட்டடம் கட்டித்தரகிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து எம்.எல்.ஏ., தொகுதி நிதியில்,ரூ.13 லட்சம் மதிப்பில்,ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் கட்டுவற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தினைகலைச்செல்வன் எம்.எல்.ஏ., நேற்றுபார்வையிட்டார். ஊராட்சி தலைவர் பியூலா ஜெயக்குமார், கவுன்சிலர் ராசாத்தி வேல்முருகன், முன்னாள் ஊராட்சி தலைவர் வேல்முருகன், கூட்டுறவு சங்க தலைவர் சுப்ரமணியன், துணைத்தலைவர் ஜெயச்சித்ரா, ஊராட்சி செயலர் ராம்குமார் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X