பொது செய்தி

தமிழ்நாடு

சேதமடைந்த அரசு குடியிருப்புகள் கடலுாரில் கலெக்டர் ஆய்வு

Added : செப் 13, 2020
Share
Advertisement

கடலுார்; கடலுார் குண்டுசாலையில் சேதமடைந்த குடியிருப்புகள் அகற்றப்பட்டு, புதியதாக கட்டப்படும் என, கலெக்டர் சந்திரசேகர சகாமுரி தெரிவித்தார்.கடலுார் குண்டுசாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியகுடியிருப்புகள் 416 உள்ளன. இதில், 192 குடியிருப்புகள் உபயோகப்படுத்த முடியாத நிலையில் சேதமடைந்துள்ளது. நேற்று கலெக்டர் சந்திரசேகர சகாமுரி, அதிகாரிகளுடன் சென்று குடியிருப்புகளை ஆய்வு செய்தார். அப்போது, பழைய குடியிருப்புகளை அகற்றிவிட்டு புதியதாக கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தார்.குடியிருப்பு பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பூங்காவை சீரமைத்து பராமரிக்கவும், பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ளவும், சிறுவர்களுக்கான விளையாட்டு சாதனங்கள் அமைக்கவும் உத்தரவிட்டார். குறிப்பிட்ட இடம் குடிசை மாற்று வாரியத்திற்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தற்சமயம் 117 குடிசைகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டவுள்ளதால், அங்கு வசிக்கும் மக்களை தற்காலிகமாக குடியிருக்க மாற்று இடம் தேர்வு செய்ய அறிவுறுத்தினார்.வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் சுபாஷ், உதவி செயற்பொறியாளர் அனிதா கிரிஷ்டினா, குடிசை மாற்று வாரிய உதவி பொறியாளர் செந்தில்ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X