பொது செய்தி

தமிழ்நாடு

மாஜி எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன் படம்காணொலி காட்சியில் ஸ்டாலின் திறப்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement

விருத்தாசலம்; தி.மு.க., தலைமை தீர்மானக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான குழந்தை தமிழரசன் படத்திறப்பு நிகழ்ச்சி விருத்தாசலம் சிவா மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது.

மேற்கு மாவட்ட செயலர் கணேசன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ரமேஷ் எம்.பி., சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நகர செயலர் தண்டபாணி முன்னிலை வகித்தனர். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் படத்தை திறந்து வைத்து, பேசினார்.நிகழ்ச்சியில், விஜி தமிழரன், டாக்டர்கள் முருகதாஸ், சங்கவி முருகதாஸ், தமிழ்அமுது தமிழரசன், சுகுமாறன், வெண்ணிலா, நகர துணைச் செயலர் ராமு, ஒன்றிய செயலர்கள் பாவாடை கோவிந்தசாமி, கனககோவிந்தசாமி, வேல்முருகன், செங்குட்டுவன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கருப்புசாமி, வி.சி., மண்டல செயலர் திருமாறன், முஸ்லிம் லீக் சுக்கூர், தி.க., மாவட்ட தலைவர் இளங்கோவன், எழுத்தாளர் இமயம், டாக்டர் செல்வகுமார் பங்கேற்றனர்.மேலும், நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, உதயநிதி மன்ற பொருளாளர் இளையராஜா, உதயன் மகேஷ், மாணவரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் அருள்குமார், வழக்கறிஞரணி ரவிச்சந்திரன், இப்ராகீம், சிவாஜிசிங், ராமானுஜம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிவேல், துணை அமைப்பாளர் வசந்தகுமார், மாவட்ட கவுன்சிலர் மனோன்மணி கோவிந்தசாமி, முதுகுளம் பாஸ்கரன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.முன்னதாக, குழந்தை தமிழரசன் மறைவிற்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X