தமிழ்நாடு

ஒரே நாளில் 590 பேர் 'டிஸ்சார்ஜ்': கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை கடந்தது

Added : செப் 13, 2020
Share
Advertisement
  ஒரே நாளில் 590 பேர் 'டிஸ்சார்ஜ்': கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை கடந்தது

கடலுார்; கடலுார்மாவட்டத்தில், நேற்று 253பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 16ஆயிரத்தை கடந்தது.

கடலுார் மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் 15 ஆயிரத்து 750பேர்.நேற்று 253பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 16ஆயிரத்து 3ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் இருந்து திரும்பியவர்கள் 4 பேர், கர்ப்பிணி பெண்கள் 2, பீல்டு ஒர்க்கர் 1, அரசு ஊழியர் 1, தனிமைப்படுத்தப்பட்டோர், பாதித்தவர்களுடன் தொடர்பில்இருந்தவர்கள் உட்பட 253 பேருக்கு தொற்று உறுதியானது.

நேற்று 590 பேர் குணமடைந்ததால், இதுவரை 12 ஆயிரத்து 717பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தொற்று பாதித்த 2,826பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.இதுவரை ஒரு லட்சத்து 39ஆயிரத்து 494பேருக்கு பரிசோதனை செய்ததில், ஒரு லட்சத்து 19ஆயிரத்து 263 பேருக்கு தொற்று இல்லை. 4,228பேருக்கு முடிவுகள் வரவேண்டும்.

மாவட்டத்தில் 121 பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.4பேர் பலிமாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவுக்கு 159பேர் இறந்துள்ள நிலையில், நேற்று 4 பேர் இறந்தனர்.சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 57 வயது புவனகிரி நபர், 73 வயது பண்ருட்டி நபர், 57 வயது நெய்வேலி பெண், கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 47வயது குறிஞ்சிப்பாடி நபர்இறந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 163ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X