சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவர் சாவில் சந்தேகம்மனைவி போலீசில் புகார்

Added : செப் 13, 2020
Share
Advertisement

பண்ருட்டி: பண்ருட்டி அருகே புற்று நோய் பாதித்தவர் சாவில் சந்தேகம் உள்ளதாக அவரது மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.பண்ருட்டி அடுத்த நடுசாத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (எ) நீலகண்டன்,51; மர வியாபாரி . கடந்த 3 ஆண்டுகளாக புற்று நோயால் பாதித்திருந்தார். கடந்த 9ம் தேதி இரவு 8 மணியளவில் சாத்திப்பட்டு துண்டுகாட்டை சேர்ந்த வினாயகம் மகன் சிவக்குமார் என்பவருக்கும் நீலகண்டனுக்கும் குடிபோதையில் வாய்தகராறு ஏற்பட்டது.பின்னர் 10 ம் தேதி காலை 11:00 மணியளவில் சிவக்குமாரின் தம்பி சசிகுமார், நீலகண்டனிம் என் அண்ணனிடம் ஏன் தகராறு செய்தாய் என கூறி தாக்கினார். இதில் உடல்நிலை பாதித்த நீலகண்டனை, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். தனது கணவர் சாவில் சந்தேகம் உள்ளதாக காடாம்புலியூர் போலீசில் நீலகண்டன் மனைவி கிருஷ்ணவேணி,46; புகார் கொடுத்தார். காடாம்புலியூர் போலீசார், சந்தேக மரணம் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X