சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாட்டரி சீட்டு விற்ற மூன்று பேர் கைது

Added : செப் 13, 2020
Share
Advertisement

கடலுார்; கடலுார் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற மூவரை போலீசார் கைது செய்தனர். கடலுார், திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். பாதிரிக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் லாட்டரி சீட்டு விற்ற அதேப் பகுதியைச் சேர்ந்த இளம்வழுதி, 52, என்பவரை கைது செய்தனர்.அதேபோல் எஸ்.என்.,சாவடியில் லாட்டரி சீட்டு விற்ற ராமானுஜம் நகரைச் சேர்ந்த சுப்ரமணியன், 65, என்பவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டு, பணத்தை பறிமுதல் செய்தனர்.கடலுார், புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் எழில்தாசன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். செம்மண்டலம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற சண்முகம் பிள்ளைத் தெருவைச் சேர்ந்த வேலு மகன் பாலமுருகன்,30, என்பவரை கைது செய்து, லாட்டரி சீட்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X