சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அவிநாசி பேரூராட்சி செயல் அலுவலருக்கு தொற்று

Added : செப் 13, 2020
Share
Advertisement

அவிநாசி:அவிநாசி பேரூராட்சி செயல் அலுவலருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில், ஏற்கனவே, 2 துப்புரவு மேற்பார்வையாளர், ஒரு ஓட்டுனர், ஒரு இளநிலை உதவியாளர் என, நான்கு பேருக்கு, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. சிகிச்சைக்கு பின், அவர்கள் குணம் பெற்றனர். இந்நிலையில், பேரூராட்சி செயல் அலுவலர், 59, கடந்த, 10 நாளாக, உடல்நலக்குறைவால் வீட்டில் இருந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் தொற்று பரிசோதனை மேற்கொண்டார். அவருக்கு, தொற்று உறுதிசெய்யப்பட்டது.பேரூராட்சி அலுவலகம், கடந்த ஒரு வாரமாக, மூடப்பட்டிருந்த நிலையில், நேற்று தான் திறக்கப்பட்டது. வழக்கம்போல் செயல்படும் என, தெரிவிக்கப்பட்டது. பேரூராட்சி அலுவலகத்தில், 117 பேர், பணிபுரியும் நிலையில், இதுவரை, 5 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X