பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து நெரிசலால் அவதி: 'தினமலர்' செய்தியால் நிம்மதி

Added : செப் 13, 2020
Share
Advertisement

திருப்பூர்:பி.என்., ரோட்டில் நிலவும் போக்குவரத்து நெரிசல் குறித்து, 'தினமலர்' நாளிதழிலில் வெளியான செய்தியை தொடர்ந்து, போலீசார் சீரமைப்பு பணி மேற்கொண்டனர்.திருப்பூர், 60 அடி ரோடு - பி.என்., ரோடு சந்திப்பு பகுதியில், தொடர்ந்து போக்குவரத்து நெருக்கடி காணப்பட்டது. வாகன நெரிசலால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்தை எதிர்கொண்டனர். வணிக வளாகம் வருவோர் நிறுத்திவிட்டு செல்லும் வாகனங்கள், கூடுதல் இடையூறு ஏற்படுத்தின.இதுகுறித்து, 'தினமலர்'நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, நேற்று முன்தினம் காலை முதல், போலீசார் அங்கு போக்குவரத்து சீரமைப்புப்பணி மேற்கொண்டனர். மூன்று திசைகளிலும், கண்காணிப்பு மற்றும் சீரமைப்பு பணி மேற்கொண்டனர்.'ஒன்வே'யில் வந்த வாகன ஓட்டிகள், போலீசாரை கண்டதும் திரும்பிச்சென்றனர். ரோட்டோர கடைகள் முன்பும், 'பேரிகார்டு' ஒட்டியும் வாகனங்கள் நிறுத்தப்படுவது, தவிர்க்கப்பட்டது. போலீசாரின் இந்நடவடிக்கை, பாதசாரிகள், பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X