பெருந்தொழுவுக்கு பஸ் இல்லை

Added : செப் 13, 2020
Share
Advertisement
 பெருந்தொழுவுக்கு பஸ் இல்லை

ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுவிட்ட போதிலும், பொங்கலுார் பெருந்தொழுவுக்கு பஸ் இயக்கப்படுவதில்லை. பஸ்சுக்காக, மணிக்கணக்கில் காத்திருக்கும் பயணிகள், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். வேலைக்கு செல்லும் தொழிலாளர், ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி பணியாளர் உள்ளிட்டோர் அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் திணறுகின்றனர். 'பெருந்தொழுவுக்கு, திருப்பூரில் இருந்து பஸ் இயக்க வேண்டும்' என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.விதிமீறலுக்கு அபராதம்பொங்கலுார் பகுதியில், கொரோனா தடுப்பு விதிமீறி செயல்படுவோர், சுகாதார துறையினரால் கண்காணிக்கப்படுகின்றனர். பொங்கலுார் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வரதராஜன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் கண்ணதாசன், கந்தசாமி, பூமலர்செல்வன், வினோத் உள்ளிட்டோர், பொதுஇடங்களில் முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு, தலா, 200 ரூபாய் அபராதம் விதித்தனர். 'தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால், கூடுதல் தொகை வசூலிக்கப்படும்' என, எச்சரித்தனர்.சந்தையில் கழிவுநீர் சங்கமம்திருப்பூர் பல்லடம் ரோடு - ஏ.பி.டி., ரோடு சந்திப்பில், தெற்கு உழவர் சந்தை உள்ளது. தினசரி, விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் என, 5,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். அலுவலர் அறையின் நுழைவு வாயில் ஒட்டிய தடுப்புச்சுவர் அருகே, சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், சுகாதாரகேடு ஏற்படுகிறது. மாநகராட்சி சுகாதாரப்பிரிவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிருமிநாசினி தெளிப்புகொரோனா தடுப்பு நடவடிக்கையாக, திருப்பூர் நகரில் உள்ள அரசு அலுவலங்களில், மாநகராட்சி சுகாதார ஊழியர்கள் மூலம், கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. குமரன் ரோட்டில் உள்ள வடக்கு தாலுகா அலுவலகம், திருப்பூர் சார்நிலை கருவூலம், குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, திருப்பூர் நகரில் உள்ள அரசு அலுவலகங்களில், மாநகராட்சி சுகாதார ஊழியர்கள் மூலம், கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. குமரன் ரோட்டில் உள்ள வடக்கு தாலுகா அலுவலகம், திருப்பூர் சார்நிலை கருவூலம், குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X