பொது செய்தி

தமிழ்நாடு

குடற்புழு நீக்க மாத்திரை: சுகாதார துறையினர் ஏற்பாடு

Added : செப் 13, 2020
Share
Advertisement

திருப்பூர்:குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, பசியின்மை, ரத்த சோகை, வயிற்று உபாதை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.ஆண்டுதோறும், பிப்., மற்றும் செப்., மாதத்தில், பள்ளி மாணவ, மாணவியருக்கு, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். செப்., மாத முகாம், நாளை துவங்கி, 28ல், முடியவுள்ளது.
சுகாதார துறையினர் கூறியதாவது:பள்ளிகளில், பெற்றோரின் ஒப்புதலுடன், குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். கொரோனா பரவலால், பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. இதனால், ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் மற்றும் அங்கன்வாடிகளில், குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது.மாவட்டத்தில், ஒரு வயது முதல், 19 வயதுக்கு உட்பட்ட, 5.61 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.காலை மற்றும் மதியம் உணவு உண்ட பின், அரை மணிநேரம் கழித்து, இந்த மாத்திரை உட்கொள்ள வேண்டும்; பக்க விளைவு ஏற்படாது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X