பொது செய்தி

தமிழ்நாடு

கடம்ப மரம் வளர்ப்பில் ஆர்வம்

Added : செப் 13, 2020
Share
Advertisement
 கடம்ப மரம் வளர்ப்பில் ஆர்வம்

திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டத்தில், 65 ஆயிரத்து 258 மரக்கன்று நடப்பட்டுள்ளன என, 'வெற்றி' அமைப்பு தெரிவித்துள்ளது.'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டத்தில், கடம்ப மரம் வளர்க்க ஊக்குவிக்கப்படுகிறது. இந்திய வனமரபியல் மற்றும் மரப்பெருக்க நிறுவன விஞ்ஞானிகள், கடம்பம், புன்னை மரங்களை அதிகம் வளர்க்க ஆலோசனை வழங்கி வருகின்றனர். ஆறாவது திட்டம் துவங்கிய நாளில் இருந்தே, கடம்ப மரம் நடவு செய்வது, அதிகரித்துள்ளது.கடம்ப மரம் வளர்க்க, அதிக மழை தேவையில்லை; வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். மரத்துக்கு, இரண்டு ஆண்டு, தண்ணீர் கிடைத்தால் போதும் என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மூன்று குழுக்களாக பிரிந்து, 10 வகை இயந்திரம் பயன்படுத்தி, மரக்கன்று நடும் பணி நடந்து வருகிறது. 2 லட்சம் என்ற இலக்குடன் துவங்கிய திட்டத்தில் இதுவரை, 65 ஆயிரத்து 258 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, 55 ஆயிரம் மரக்கன்று நட, இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டத்தில் மரக்கன்று நட விரும்புவோர், 90470 86666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்' என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X