பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு

Added : செப் 13, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை; திருநாவலுார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கிராமங்களுக்கு நேரில் சென்று, மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.திருநாவலுார் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை இளங்கோதை தலைமையில் ஆசிரியர்கள் ராஜசேகரன், மகேஸ்வரி, பாத்திமா பேகம், வாசுதேவன் ஆகியோர் திருநாவலுார், கெடிலம், மாரனோடை, மேட்டாத்துார், பெரும்பட்டு, சேந்தமங்கலம், மயிலங்குப்பம், வைப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் வீதி வீதியாகச் சென்று அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கக்கூடிய விலையில்லா பொருட்கள், கல்வி உதவித்தொகைகள், சலுகைகள் குறித்து பெற்றோர்களிடம் எடுத்துரைத்தனர். கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் கொரோனா தெற்று குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X