பொது செய்தி

தமிழ்நாடு

பிரிண்டிங், பாலிமர் தொழில்நுட்பம் : படித்தால் வேலைவாய்ப்பு அதிகம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

கோவை:பாலிமர் தொழில்நுட்பம், பிரிண்டிங் பொறியியல் படிப்புகளுக்கு வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன.தொழில்நுட்ப துறைகளில், பாலிமர் டெக்னாலஜி வளர்ந்து வரும் ஒரு துறையாக உள்ளது. பாலிமரின் துருப்பிடிக்காத தன்மை, அதன் வலிமை காரணமாக வீட்டு உபயோகப் பொருட்களில் இருந்து விண்கலங்கள் வரை இதன் பயன்பாடு உள்ளது. மின் உற்பத்தி, விமானங்கள், பேக்கேஜிங் தொழில் ஆகியவற்றில் பாலிமர் பயன்பாடு அதிகமாகும்.
இதுகுறித்த தொழில்நுட்பங்கள் பாலிமர் டெக்னாலஜி மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகின்றன. தொழில் நிறுவனங்கள், உற்பத்தித் தொழில் நிறுவனங்களில் பாலிமர் டெக்னாலஜி படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. இது நான்கு ஆண்டுப் படிப்பாகும். இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.பிரிண்டிங் டெக்னாலஜி -பி.இ.,: அச்சு தொழில்நுட்பத் துறையில் பிரிண்டிங்டெக்னாலஜி முக்கிய படிப்பாக உள்ளது. பல்வேறு வகையான அச்சிடும் முறைகள், நவீன அச்சுத்துறையில் கம்ப்யூட்டரின் பங்கு, மேலாண்மை போன்ற பல்வேறு அம்சங்கள் இப்படிப்பில் கற்றுத்தரப்படுகின்றன. புத்தக வெளியீட்டு நிறுவனங்கள், பேக்கேஜ் பிரிண்டிங் பிரிவுகள், அச்சக இயந்திரத் தயாரிப்பு நிறுவனங்கள், அரசு அச்சகங்கள், 'இ--பப்ளிஷிங்' நிறுவனங்களில் வேலை கிடைக்கின்றன. தற்போது பிரிண்டிங் டெக்னாலஜி படித்த மாணவர்கள் சாப்ட்வேர் நிறுவனங்களிலும் வேலைக்குச் சேர்கின்றனர். இது நான்கு ஆண்டுப் படிப்பாகும். இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.உற்பத்தி பொறியியல் - பி.டெக்., : இன்ஜினியரிங் படிப்புகளில் ஒன்றான உற்பத்தி பொறியியல், வாடிக்கையாளர்களின் திருப்திக்கேற்ப பொருட்களை தரமானவையாக உற்பத்தி செய்தல், குறிப்பிட்ட காலத்துக்குள் தருதல் போன்றவற்றில் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கிறது.
இந்த படிப்பு பல்வேறு துறைகளுடன் தொடர்புடையது.இண்டஸ்டிரியல் இன்ஜினியரிங், மேனுபேக்சரிங் இன்ஜினியரிங், உற்பத்தி பொருள் வடிவமைப்பு, மார்கெட்டிங், நிதி மற்றும் கார்ப்பரேட் பிளானிங் போன்ற துறை சார்ந்த பயிற்சிகளும் இந்த படிப்பின் மூலம் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பொருட்களை உற்பத்தி செய்யும் பணிகளில் மேம்பாடு அடைவதற்கு உற்பத்தி பொறியியல் மிகவும் பயன்படுகிறது. படிப்பு காலம் நான்கு ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை படிப்பும் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X