பொது செய்தி

தமிழ்நாடு

வடதொரசலூர் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையில் ஆசிரியர்கள் தீவிரம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

தியாகதுருகம்; வடதொரசலுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை பணியில் ஆசியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.கொரோனா நோய் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இக்கல்வியாண்டில் குறித்த நேரத்தில் பள்ளிகள் திறக்கப்பட முடியவில்லை. இந்நிலையில், மாணவர் சேர்க்கை மற்றும் ஆன்லைன் வகுப்புகள் குறித்து கல்வித்துறை பல்வேறு வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.அதன்படி தியாகதுருகம் அடுத்த வடதொரசலுார் அரசு நடுநிலைப் பள்ளியில் புதிய கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது.தலைமையாசிரியர் பாஸ்கரன் தலைமையில் ஆசிரியர்கள் அனைவரும் முகக் கவசம் மற்றும் கையுறை அணிந்து வீடு வீடாகச் சென்று பெற்றோர்களை சந்தித்து அரசு பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர். வடதொரசலுார், ரீட்டா நகர், கோவிந்தசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் களப்பணி மேற்கொண்டனர்.அப்போது, கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான கால அட்டவணை, மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள், விலையில்லா பொருட்கள், கல்வி உதவித்தொகைகள் உள்ளிட்ட சலுகைகள் குறித்து துண்டு பிரசுரம் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X