மின் கம்பத்தில் சூழ்ந்த கொடிகள்

Added : செப் 13, 2020
Share
Advertisement

சின்னசேலம்; அம்மகளத்துார் அருகே மின் கம்பத்தில் கொடிகள் வளர்ந்துள்ளதால் அடிக்கடி மின் நிறுத்தம் ஏற்படுவதுடன் மின்சாரம் தாக்கும் அபாயமும் இருப்பதால் மக்கள் அச்சமடைந்துள் ளனர்.

அம்மகளத்துார் தனியார் பால் கொள்முதல் நிலையம் அருகே உள்ள மின் கம்பம் பல மாதங்களாக பராமரிப்பு செய்யப்படாமல், தற்போது அடிப்பகுதியில் அடர்ந்த செடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. மேலும், 'ஸ்டே' கம்பி மற்றும் கம்பத்தில் கொடிகள் படர்ந்து வளர்ந்துள்ளன. இந்த கொடிகள் மேலும் வளர்ந்து மின் கம்பியில் படரும்.அவ்வாறு மின் கம்பிகளில் படர்ந்தால், மழைக்காலங்களில் கொடிகளின் மீது மின்சாரம் பாய்ந்து கால்நடைகள் மற்றும் பொதுமக்களுக்கு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், காற்றடித்தால் அடிக்கடி மின் விநியோகம் தடைபட வாய்ப்பும் உள்ளது. எனவே, மின் வாரிய அதிகாரிகள், மின் கம்பத்தை சுற்றியுள்ள புதர்களை அகற்றுவதுடன், கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X