பொது செய்தி

தமிழ்நாடு

உளுந்துார்பேட்டை காவல் நிலையம் முன் பெயர் பலகை வைக்க நடவடிக்கை தேவை

Added : செப் 13, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை காவல் நிலையத்தில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலக வளாகத்தில் போலீஸ் நிலையம், கருவூலம், சார் பதிவாளர் அலுவலகம், இ-சேவை மையம், கிளைச் சிறை, பொதுப்பணித் துறை, வட்ட வழங்கல் அலுவலகம், தேர்தல் பிரிவு அலுவலகம், நில சர்வே பிரிவு அலுவலகம், ஆதார் புகைப்படம் எடுக்கும் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகத்தில் தாலுகா அலுவலகம் இருப்பதைத் தெரிவிக்க நுழைவு வாயில் பகுதியில் வருவாய்த்துறை அலுவலகம் என போர்டு வைத்துள்ளனர்.அதே போன்று காவல் நிலையம் இருப்பதை தெரிவிக்கும் வகையில் பெயர் பலகை வைத்திருந்தனர். ஆனால், தற்போது அந்த பெயர் பலகை அங்கு இல்லை. இதனால் வெளியூரில் இருந்து வருபவர்களுக்கும், விபத்தில் சிக்கி புகார் கொடுக்க வருபவர்களுக்கும் காவல் நிலையம் இருக்கும் இடம் தெரியாமல் அலைகின்றனர்.எனவே மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து காவல் நிலையம் முன் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X