பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடக்கிறது: குமரகுரு எம்.எல்.ஏ., பெருமிதம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை; 'இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்கும் வகையில் முதல்வர் பழனிசாமி ஆட்சி நடந்து வருகிறது' என அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பேசினார்.

திருவெண்ணெய்நல்லுார் மற்றும் திருநாவலுார் ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உளுந்துார்பேட்டையில் நடந்தது.கூட்டத்திற்கு திருவெண்ணெய்நல்லுார் ஒன்றிய செயலாளர்கள் ஏகாம்பரம், ராமலிங்கம், திருநாவலுார் ஒன்றிய செயலாளர்கள் சந்திரன், செண்பகவேல் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச்செயலாளர் பரமாத்மா வரவேற்றார். திருவெண்ணெய்நல்லுார் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் திருநாவலுார் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பேசியதாவது:இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்கும் வகையில் முதல்வர் பழனிசாமி ஆட்சி நடந்து வருகிறது. மக்களுக்காகவே பாடுபடும் இந்த ஆட்சி தொடரும்.நடிகர்கள் சீமான், கமல், ரஜினி, விஜய் போன்ற நடிகர்கள் முதல்வராக வேண்டும் என்ற கனவோடு அரசியல் கட்சி ஆரம்பிக்கின்றனர். ஆனால் ஒருபோதும் நடிகர்கள் முதல்வராக முடியாது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மக்களுக்காகவே நடித்து, மக்களுக்கு நல்ல கருத்துக் களை கொண்டு சேர்த்தனர். இதனால் அவர்கள் மக்கள் இதயத்தில் நீங்கா இடம் பிடித்ததால் முதல்வராகி சிறப்பான ஆட்சியை நடத்தினர்.இந்த கொரோனா காலத்திலும் மக்களுக்காக முதல்வர், உழைத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நிறைவேற்றி வருகிறார். அதுபோல் உளுந்துார்பேட்டை தொகுதியில் அனைத்து சாலைகளும் போடப்பட்டுள்ளன. சாலைகள் போடாத பகுதிகளே இல்லை.எனவே அ.திமு.க.,வில் இளைஞர்களை அதிகம் சேர்த்து மேலும் வலுவாக்க வேண்டும். மக்களுக்கான திட்டங்கள் முழுமையாக சென்றடைய அனைவரும் உழைக்க வேண்டும்.இவ்வாறு குமரகுரு எம்.எல்.ஏ., பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X