மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் காலமானார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் காலமானார்

Added : செப் 13, 2020
Share
 மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் காலமானார்

சென்னை;மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான சுதாங்கன், ௬௩, சென்னையில் நேற்று காலமானார்.நெல்லை மாவட்டம், தென்திருப்பேரையில் பிறந்தவர் சுதாங்கன். இவரின் இயற்பெயர் ரங்கராஜன். மாத இதழ் ஒன்றில் பணியாற்றிய போது, ஏற்கனவே, மூத்த எழுத்தாளர் அதே பெயரில் இருந்ததால், சுதாங்கன் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டார்.எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது, அவரின் தொகுதி நிலவரங்களை எழுதி, செயல்பட துாண்டியவர். கொத்தடிமைகளை மீட்க எழுத்தை பயன்படுத்தியவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர். தமிழின் பிரபல நாளிதழ்கள், மாத இதழ்களில் இணையாசிரியர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். பிரபல தொலைக்காட்சிகளிலும் பணியாற்றியவர். இவர், 1986ல், கோல்கட்டாவின், 'ஸ்டேட்ஸ்மென்' பத்திரிகையின் விருதை பெற்றவர்; ௪௦க்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஒரு குறுநாவல், தொடர்கதை எழுதியுள்ளார். இவரின், 'சுட்டாச்சு சுட்டாச்சு, தேதியில்லாத டைரி' உள்ளிட்ட கட்டுரை தொடர்கள், வாசகர்களின் பெருத்த வரவேற்பை பெற்றவை. சென்னை, நந்தனத்தில் வசித்து வந்த இவர், சில நாட்களுக்கு முன், கீழே விழுந்ததால், தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மூச்சுத் திணறலால், நேற்றுகாலமானார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X