பொது செய்தி

தமிழ்நாடு

'தூய்மை நகரம் கள்ளக்குறிச்சி' இயக்கம்:

Added : செப் 13, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் 'துாய்மை நகரம் கள்ளக்குறிச்சி' என்ற இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.

எஸ்.பி., ஜியாஉல் ஹக் முயற்சியின்பேரில் சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக சேவை அமைப்புகள் மற்றும் 'பீட் டி பென்குயின்' இயக்கம் சார்பில் 'துாய்மை நகரம் கள்ளக்குறிச்சி' என்ற இயக்கம் நேற்று துவங்கியது.கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்க கட்டடத்தில் நடந்த நிகழ்ச்சியில், டி.எஸ்.பி., ராமநாதன், நகராட்சி கமிஷனர் பாரதி, துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார், தாசில்தார் பிரபாகரன், அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் செல்வகுமார், செயலாளர் ஜெயக்குமார், சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஸ்ரீதர், செயலாளர் யுவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.மாணவர்கள் அமுல்யா அனில், உஜ்வல் அசுதோஷ் ஆகியோர் நாட்டை துாய்மையாக வைத்திருப்பதன் நோக்கம் குறித்து காணொளி காட்சி மூலம் விளக்கிப் பேசினர்.ரோட்டரி சங்க பொருளாளர் ராமலிங்கம் வரவேற்றார். சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் முன்னிலையில் நகராட்சி துாய்மைப் பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.இயக்கத்தை துவக்கி வைத்து எஸ்.பி., பேசுகையில், 'மாவட்ட தலைநகரை நாம் சுத்தமாக வைத்திருந்தால், மாவட்டத்தின் பிற பகுதியும் சுத்தமானதாக மாறிவிடும். எனவே நாம் நம் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது போல், நமது கள்ளக்குறிச்சி நகரத்தையும் துாய்மையானதாக மாற்றிட வேண்டும்.நகர தெருக்களில் குப்பைகளால் சுகாதார சீர்கேடுகள் உருவாகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, நகரை துாய்மையானதாக மாற்றிட உறுதி மொழியேற்போம். நகராட்சி நிர்வாகத்தினருக்கு ஒத்துழைப்பு அளித்திடுவோம்.வாரம் ஒருமுறை ஒவ்வொரு பகுதியாக தேர்வு செய்து, துாய்மையாக்கி, வெளித்துாய்மையை பேணுவோம். சுத்தமான இடம் கோவிலுக்கு சமமானதாகும். இதற்காக ஐதராபாத் நகரில் இருந்து வந்துள்ள 'பீட் டி பென்குயின்' எனும் அமைப்பினரின் வழிகாட்டுதல்கள்படி, கள்ளக்குறிச்சி நகர பகுதியை, நாம் துாய்மையானதாக மாற்றிடுவோம்' என்றார்.ரோட்டரி செயலாளர் இம்மானுவேல் சசிகுமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X