பொது செய்தி

தமிழ்நாடு

இருசக்கர வாகனம் நிறுத்த எல்லைக்கோடு

Added : செப் 13, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார்; திருக்கோவிலுாரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் சாலையோரம் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக போலீசார் கயிறு பதிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

திருக்கோவிலுாரில் புதிதாக பொறுப்பேற்ற டி.எஸ்.பி., ராஜி போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் வடக்கு வீதியை ஒரு வழிப்பாதையாக மாற்றுவது. இரு சக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதை விடுத்து சாலையோரம் குறிப்பிட்ட எல்லைக்குள் நிறுத்துவதற்கு வசதியாக கயிறு அடிப்பது.பஸ் நிலையத்திற்குள் தள்ளுவண்டி உள்ளிட்ட வாகனங்களை அனுமதிக்கக்கூடாது என்பது உட்பட பல்வேறு ஆலோசனைகளை போலீசாருக்கு வழங்கினார்.அதன்படி வடக்கு வீதி, யூனியன் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட போக்குவரத்து நெரிசல் மிகுந்த தெருக்களில் சாலையோரம் போக்குவரத்துக்கு பாதிப்பின்றி இருசக்கர வாகனங்களை ஓரமாக நிறுத்தவும், தள்ளு வண்டியை எல்லைக் கோட்டிற்குள் நிறுத்தி விற்பனை செய்யும் வகையில் சாலையோரம் கயிறு பதிக்கும் பணி நேற்று நடந்தது.சப் இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், உலகநாதன் மற்றும் போலீசார் மேற்பார்வையில் 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர். இதன்மூலம் நகரில் போக்குவரத்து நெரிசல் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X