பொது செய்தி

இந்தியா

ஸ்ரீராம நாமத்துடன் எதிரொலித்த திருமலை

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement

திருப்பதி:திருமலையில் நாதநீராஜன மண்டபத்தில், நடந்த சுந்தரகாண்ட பாராயணத்தின் போது ஸ்ரீராம நாமத்தால் திருமலை எதிரொலித்தது.திருமலையில் கொரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் நலம் பெற தேவஸ்தானம் கடந்த ஜூன் மாதம் முதல் சுந்தரகாண்ட பாராயணத்தை துவங்கி நடத்தி வருகிறது. 68 சர்க்கங்களை கொண்ட சுந்திரகாண்டத்தில் தற்போது, 14 சர்க்கங்களின் பாராயணம் நடந்து முடிந்துள்ளது.



latest tamil news



இவை தேவஸ்தான தொலைகாட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 150 முதல் 200 ஸ்லோகங்கள் பாராயணம் செய்யப்பட்டவுடன், அதை தேவஸ்தானம் அகண்ட பாராயணமாக நடத்தி வருகிறது.இதுவரை, 3 அகண்ட பாராயணங்கள் திருமலையில் முடிந்துள்ள நிலையில் நேற்று காலை 12 சர்க்கம் முதல் 14ம் சர்க்கம் வரையிலுள்ள 146 ஸ்லோகங்கள் அகண்ட பாராயணம் செய்யப்பட்டது. 200 வேதபண்டிதர்கள் இணைந்து திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் அகண்ட பாராயணம் செய்தனர். இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


latest tamil news



இந்த அகண்ட பாராயணத்தின் போது ஸ்ரீராமநாமம் பாராயணம் செய்யப்பட்டது. இந்த ராமநாம பாராயணத்தில் பக்தர்களும் கலந்து கொண்டனர்.இதனால், திருமலை முழுவதும் ஸ்ரீராம நாமம் எதிரொலித்தது. இதில், தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதுபோன்ற அகண்ட பாராயணத்தால் உலக மக்கள் சுபிக் ஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பர் அதனால், தேவஸ்தானம் இதுபோன்ற பாராயணங்களை திருமலையில் நடத்தி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வரும் தேர்தலில் இந்துமத விரோதி சுடலை கானை தோற்கடிப்போம்
Rate this:
Cancel
umarani srikanth - Chennai,இந்தியா
13-செப்-202014:11:15 IST Report Abuse
umarani srikanth ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
13-செப்-202013:18:08 IST Report Abuse
sankaseshan தமிழ்நாடு கோவில்களில் ஏன் இது போல நடக்க வில்லை திராவிட தெய்வங்கள் இருக்கும் மசூதிகளில் , சர்ச்சுகளில் ஏன் பிரார்த்தனை நடத்தலாமே .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X