பொது செய்தி

தமிழ்நாடு

தேர்வில் மாற்றுத் திறனாளிகள் சொல்வதை எழுதுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை

Added : செப் 13, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனி, துணை மற்றும் பட்டய தேர்வுகளில் பங்கேற்கும் மாற்றுத் திறனாளிகள் சொல்வதை எழுதும் சலுகை கேட்டு விண்ணப்பித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என சி.இ.ஓ., கிருஷ்ணபிரியா தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் 21ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 7ம் தேதி வரை 8ம் வகுப்பு தனித்தேர்வுகள், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான துணைத் தேர்வுகள் மற்றும் தொடக்கக் கல்வி பட்டய தேர்வுகள் நடக்கிறது.இந்த தேர்வுகளை எழுத உள்ள மாற்றுத்திறனாளிகளில், சொல்வதை எழுதுபவர் சலுகை கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி தேர்வர்கள், மற்றும் சொல்வதை எழுதுபவர்கள் தேர்வு நடைபெறுவதற்கு 4 நாட்களுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை கல்வி மாவட்டத்திற்குட்பட்ட மையங்களில் தேர்வு எழுதுபவர்கள், ஏதேனும் சிரமம் இருந்தால் கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் 98420 51698 என்ற மொபைல் போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.அவ்வாறு தெரிவிப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.கொரோனா தொற்று இல்லை என்பதற்கான மருத்துவச் சான்றினை தேர்வு மையத்திற்கு எடுத்து வரவேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X