பொது செய்தி

தமிழ்நாடு

கனரக தொழிற்சாலைகள்: குறு, சிறு தொழிற்சங்கத்தினர் முதல்வரிடம் மனு

Added : செப் 13, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் கனரக தொழிற்சாலைகள் ஏற்படுத்த முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரத்திற்கு வருகை தந்த முதல்வர் பழனிசாமியிடம், மாவட்ட குறு மற்றும் சிறு தொழிற்சங்கத் தலைவர் அம்மன் கருணாநிதி கொடுத்துள்ள மனு:விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே இருப்பு பாதை வசதிகள் இருப்பதால், தொழில்துறை வளர்ச்சிக்கு ஏற்ற மாவட்டமாக உள்ளது. இதனால், கனரக தொழிற்சாலை கொண்டு வரவேண்டும்.மேலும், விவசாயம் மூலம் விளையக்கூடிய மூலப் பொருளை வைத்து தொழில்கள் அமைய தொழிற்சாலைகள் கொண்டு வரவேண்டும்.விழுப்புரத்திலிருந்து, செஞ்சி சாலை, திருக்கோவிலுார் சாலை, மயிலம் சாலை ஆகிய பகுதிகளில் ஒரு இடத்தை தேர்வு செய்து, 250 ஏக்கர் பரப்பளவில் சிட்கோ தொழிற்பேட்டை கொண்டுவர வேண்டும். தொழில் தொடங்குபவர்கள் அனுமதி பெற சிங்கில் விண்டோ சிஸ்டம் உள்ளது. அதற்கு வேண்டிய ஆவணங்களைக் கொடுக்கும் துறைகளால் அலைக்கழிப்பு ஏற்படுகிறது. அந்த துறைகளையும் சிங்கில் விண்டோ சிஸ்டத்தில் கொண்டு வரவேண்டும்.நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு வெளியே அமைந்துள்ள ஊரகப் பகுதிகளில் குறு மற்றும் சிறு தொழில்கள் வளர்ச்சியடையவும், மின்சாரம் தடையில்லாமல் கிடைக்கவும், நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லையிலிருந்து குறைந்தது 10 கி.மீ., சுற்றளவிற்கு தொழிற்சாலைகளுக்கான மும்முனை முழு நேர மின்சாரம் வழங்க வேண்டும்.விழுப்புரம் மாவட்டத்தில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை கொண்டு வரவேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அரிசி ஆலைகள் மூலம் கிடைக்கும் தவிடை பயன்படுத்தி உணவு எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை கொண்டு வர வேண்டும்.மேலும் அரிசி ஆலைகளில் நீராவி உருவாக்க உமி எரிபொருளாக பயன்படுத்துவதால் அதிக அளவில் கிடைக்கும் சாம்பல் மூலம் சோடியம் சிலிகேட் தயாரித்து ரப்பர் தொழிற்சாலைகளுக்கு பயன்படும் வகையில் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். சேலத்தில் அமைந்துள்ள ஜவ்வரிசி விற்பனை முனையம் போன்று, விழுப்புரம் மாவட்டத்தில் அரிசி விற்பனை முனையம் அமைக்கப்பட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X