பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் அரசு கண் மருத்துவமனையில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு சிகிச்சை

Added : செப் 13, 2020
Share
Advertisement

திண்டிவனம்; திண்டிவனத்தில் அரசு கண் சிகிச்சை மருத்துவனையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.திண்டிவனத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், ஜெயபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை மற்றும் பழைய நகராட்சி கட்டடம், அரசு கண் மருத்துவமனையில் கொரோனா தொற்றை கண்டறியும் பி.சி.ஆர்., பரிசோதனை நடத்தப்பட்டு வந்தது.தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்நிலையில், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் திண்டிவனம் அரசு மருத்துவமனையை கொரோனா சிகிச்சை வார்டாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிரவச வார்டு இருப்பதால், கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றுவதில் சிக்கல் நீடித்து வந்தது.இந்நிலையில், திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வந்த கர்ப்பிணிக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை நடத்தியதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த பெண், திண்டிவனம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள அரசு கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.முதன் முதலாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக அனுமதித்திருப்பது குறித்து அரசு மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'இனி பிரசவத்திற்காக வரும் கர்ப்பிணிகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டால், அரசு கண் சிகிச்சை மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X