அரசு மருத்துவமனைக்கு ஸ்ட்ரெச்சர்கள் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனைக்கு ஸ்ட்ரெச்சர்கள் வழங்கல்

Added : செப் 13, 2020
Share

விக்கிரவாண்டி; விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு ஸ்ட்ரெச்சர்களை லயன்ஸ் சங்கத்தினர் வழங்கினர்.

முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பன்னாட்டு அரிமா சங்க நிதியிலிருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 10 ஸ்ட்ரெச்சர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அரிமா சங்க ஆளுனர் முருகப்பன் தலைமை தாங்கினார். உடனடி முன்னாள் ஆளுனர் சரவணன் முன்னிலையில் கல்லுாரி டீன் குந்தவி தேவியிடம் ஸ்ட்ரெச்சர்கள் வழங்கப்பட்டது.மாவட்ட அரிமா செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பழனியப்பன், இணைப் பொருளாளர் கலைச்செல்வன், மண்டல ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன், விழுப்புரம் ஹோஸ்ட் அரிமா சங்க தலைவர் வேல்முருகன், செயலாளர்கள் ராஜவேல், கோபி, காமதேனு அரிமா சங்க வட்டார தலைவர் புருஷோத்தமன், தலைவர் சண்முகம், துணைத் தலைவர் கிருஷ்ணசாமி, சுப்ரீம் அரிமா சங்க மாவட்ட தலைவர் சம்சுதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X