பொது செய்தி

தமிழ்நாடு

போலீசார் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் 

Added : செப் 13, 2020
Share
Advertisement

செஞ்சி; செஞ்சியில் போலீசார் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். செஞ்சி சப் டிவிஷன் போலீசார் சார்பில், டி.எஸ்.பி., அலுவலகம் அருகில் இருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு, ஏ.டி.எஸ்.பி., தேவநாதன் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி., இளங்கோ முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் ஜீவராஜ் மணிகண்டன், கலைச்செல்வி, பாலமுருகன், ஜெயந்தி, ராதாகிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர்கள் சங்கர் சுப்ரமணியன், இளங்கோ, செந்தில்குமார், கார்த்தி, பாக்யலட்சுமி, நரசிம்ம ஜோதி மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பங்கேற்றனர்.காந்தி பஜார், சிங்கவரம் சாலை, தேசூர் பாட்டை, திருவண்ணாமலை சாலை, திண்டிவனம் சாலை வழியாக சென்ற ஊர்வலத்தில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ஏ.டி.எஸ்.பி., முகக் கவசம் வழங்கினார். பொது மக்கள் சமூக இடைவெளியை கடை பிடிக்கவும், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என வலியுறுத்தி பிரசாரம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X