பொது செய்தி

தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார நிலையத்திற்குகை கழுவும் தொட்டி வழங்கல்

Added : செப் 13, 2020
Share
Advertisement

செஞ்சி; அனந்தபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கை கழுவும் தொட்டி வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சமுதாய குழுமத் தலைவர் அலீல் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் ஜேசு ஜூலியஸ் ராஜா முன்னிலை வகித்தார். அனந்தபுரம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பாலாஜி, கருவாட்சி சுகாதார ஆய்வாளர் சசிகுமாரிடம் ரோட்டரி துணை ஆளுனர் காங்கேயன், விழுப்புரம் ரோட்டரி முன்னாள் தலைவர் பாலகுருநாதன், செயலாளர் காசி விஸ்வநாதன் ஆகியோர் வழங்கினர்.மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டிருந்த பெண்களுக்கு பழ வகைகள், பிஸ்கெட், உடைகள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டது.ரோட்டரி பொருளாளர் பாபு அய்யர் நிர்வாகிகள் சவுந்தர்ராஜன், சுந்தரமூர்த்தி, ஆனந்தன், கலையரசு உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X