சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளிவாசலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு2 கடைகளுக்கு 'சீல்': வக்பு வாரியம் நடவடிக்கை

Added : செப் 13, 2020
Share
Advertisement

விழுப்புரம்: விழுப்புரத்தில், பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 2 கடைகளுக்கு வக்பு வாரிய அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.விழுப்புரம் நகரில் பாகர்ஷா வீதியில், ஹாஜி மன்சூர்ஷா தர்கா மற்றும் பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்த பள்ளிவாசலுக்கு சொந்தமாக அப்பகுதியில் உள்ள இடங்களை தனி நபர்கள் ஆக்கிரமித்து ஒருவர் அரிசி கடையும், மற்றொருவர் காலணிகள் விற்கும் கடையும் நடத்தி வந்தனர்.இந்த ஆக்கிரமிப்பை அகற்றி இடத்தை, பள்ளிவாசலுக்கு மீட்டுத் தரும்படி, பள்ளிவாசல் முத்தவல்லி ஷாஜகான் என்பவர், சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடர்ந்தார்.கோர்ட் உத்தரவின் பேரில், நேற்று, வக்பு வாரிய விழுப்புரம் மற்றும் கடலுார் மாவட்ட கண்காணிப்பாளர் முகமது ஷபியுல்லா, வேலுார் கண்காணிப்பாளர் அப்துல்லா, கடலுார் ஆய்வாளர் சையத்ரிசார் ஆகியோர் விழுப்புரம் பாகர்ஷா வீதியில், பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்திருந்த 2 கடைகளையும் காலி செய்ய வைத்து பூட்டி 'சீல்' வைத்தனர்.பின்னர், அந்த இடத்தை மீட்டு, பள்ளிவாசல் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இதையொட்டி, அங்கு ஏதும் அசம்பாவிதம் நேராமல் இருப்பதற்காக, பாகர்ஷா வீதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X