புலிகள் காப்பகத்தில் மொபைல் போன் தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புலிகள் காப்பகத்தில் மொபைல் போன் தடை

Added : செப் 13, 2020
Share

பந்தலுார்:கர்நாடக மாநிலம், பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் அருகே, கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள, கபினி, குண்டரா பகுதிகளில், வறட்சியான காலங்களிலும் புலி, சிறுத்தை கூட்டமாக நடமாடுவதை பார்க்க முடியும்.இங்கு, வனவிலங்குகளை பார்க்கும் சுற்றுலா பயணிகள், வாகன டிரைவர்கள், தங்கள் மொபைல் போன்களில் புகைப்படம், வீடியோ எடுப்பதுடன், பிற பகுதிகளில் உள்ள சுற்றுலாப்பயணிகளை அந்த இடத்திற்கு வருமாறு சப்தம் போட்டு அழைப்பதால், புலிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. சில நேரங்களில் அவை சுற்றுலா பயணிகளை துரத்தி வருகின்றன.இதனால், மொபைல் போன்களை வரவேற்பு மையத்தில் பாதுகாப்பாக கொடுத்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. மீறி எடுத்து சென்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால், கேமரா எடுத்து செல்ல அனுமதி உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X