சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விதிமுறை மீறி ஓட்டல்களில் பயன்படுத்தியமின் மோட்டார்கள் பறிமுதல்: நகராட்சி அதிரடி

Added : செப் 13, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரத்தில் விதிமுறைகளை மீறியும், வரிபாக்கி செலுத்தாமலும் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டாரை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.விழுப்புரம் நகரில் விதிமுறைகளை மீறி மின் மோட்டார் பொருத்தி அதிகளவில் தண்ணீர் உறிஞ்சப்படுவதாக நகராட்சிக்கு புகார்கள் வந்தன.அதனைத் தொடர்ந்து, நகராட்சி கமிஷனர் தட்சணாமூர்த்தி உத்தரவின் பேரில், அதிகாரிகள், விழுப்புரம் நகர பகுதிகளில் விதிமுறைகள் மீது தண்ணீரை அதிகமாக உறிஞ்சும் மின் மோட்டார் பயன்படுத்தும் நபர்கள் குறித்து ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.அது மட்டுமின்றி, விழுப்புரம் நகராட்சிக்கு கடந்த 10 ஆண்டுகளாக, குடிநீர் வரி பாக்கி மட்டும் 5 கோடி ரூபாய் உள்ளது.இதனால், வரிபாக்கி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் விதிமுறை மீறி மின் மோட்டார் இணைத்து அதிகளவில் குடிநீர் உறிஞ்சும் இணைப்புகளையும் துண்டிக்கும் பணிகளில் நகராட்சி அதிகாரிகள் நேற்று அதிரடியாக ஈடுபட்டுள்ளனர்.அதில், விழுப்புரம் நேருஜி ரோடு, எல்லீஸ்சத்திரம் சாலைகளில் உள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளுக்குள் நகராட்சி விதிமுறைகள் மீறி பொருத்தியிருந்த 10 நீர் மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.இந்த மோட்டார்கள் விரைவில் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நகர பகுதிகளில் விதிமுறைகள் மீறி குடிதண்ணீரை தனி நபர்கள், மோட்டார் மூலம் உறிஞ்சும் செயல்களை, பொதுமக்கள் கண்டறிந்தால் உடனே, நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம். மக்களின் ஒருங்கிணைப்பு மூலமே, தண்ணீரை விதிமுறை மீறி எடுப்போரின் பிரச்னைக்கு தீர்வு காணலாம் என நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X