பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., செயற்குழுக் கூட்டம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரத்தில் மாவட்ட பா.ஜ., செயற்குழுக் கூட்டம் நடந்தது.மாநில செயலாளர் கார்த்திகாயினி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கலிவரதன் வரவேற்றார். பொதுச் செயலாளர்கள் பாண்டியன், ஜெயக்குமார், ராஜேந்திரன், பொருளாளர் சுகுமார் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு தியாகராஜன், தர்மராஜ், விவசாய அணி செயற்குழு கோவிந்தராஜ், பட்டியல் அணி செயற்குழு ரகு, மாவட்ட ஊடக பிரிவு தலைவர் சத்யன், துணைத் தலைவர் ஜெகதீஷ் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில், நந்தன் கால்வாய் திட்ட பணிகளை முடித்து, விக்கிரவாண்டி ஏரிக்கு திட்டமிட்டபடி தண்ணீரைக் கொண்டு வர வேண்டும். வரும் 17ம் தேதி, பிரதமர் மோடி பிறந்த நாளை மாவட்டத்தில் சேவை வாரமாக கொண்டாட வேண்டும்.கொடியேற்றம், அன்னதானம், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட நிகிழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X