பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவக் கல்லூரியில் நோயாளிகள் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி

Added : செப் 13, 2020
Share
Advertisement

விக்கிரவாண்டி; விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மருத்துவமனையில் நோயாளிகள் செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது.விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சைக்கான சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊரடங்கு தளர்விற்கு பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் உறவினர்கள், பார்வையாளர்கள் என ஏராளமானோர் மருத்துவமனைக்கு வருகின்றனர்.இதையடுத்துகல்லுாரி டீன் குந்தவி தேவி உத்தரவின் பேரில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நேரடியாக உள்ளே செல்லவும், நோயாளின் உதவியாளர் ஒருவரை மட்டுமே அனுமதிக்கும் வகையில் அவருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.தற்போது, நோய் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தேவையில்லாமல் மருத்துவமனையில் நுழையும் நபர்களை தடுக்கும் வகையில் மருத்துவமனையின் நுழைவு வாயிலில் பேரிகார்டு அமைத்து செக்கியூரிட்டி போடப்பட்டுள்ளது. அவர்கள், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் வாகனங்களை மட்டும் அனுமதித்து வருகின்றனர்.நோயாளிகளின் உதவியாளர் வாகனங்கள் நுழைவு வாயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு உதவியாளர் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X