இந்தியா

தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் புதுச்சேரி பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

புதுச்சேரி; கூட்டு ஆராய்ச்சிக்காக புதுச்சேரி பல்கலைக்கழகம் தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது.தேசிய பெருங்கடல் ஆராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் பூமி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனம். இந்திய பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் வாழும் மற்றும் உயிரற்ற வளங்களை நிலையான அறுவடை செய்வதோடு தொடர்புடைய பல்வேறு பொறியியல் சிக்கல்களை தீர்க்க நம்பகமான உள்நாட்டு தொழில்நுட்பத்தை உருவாக்குவதே என்.ஐ.ஓ.டி. யின் முக்கிய நோக்கம்.புதுச்சேரி பல்கலைக்கழகம், தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டதன் மூலம் நுண்ணுயிரியல் துறை, பெருங்கடல் ஆய்வுகள் மற்றும் கடல் உயிரியல் துறை, போர்ட் பிளேர் வளாகம் மற்றும் பயோடெக்னாலஜி துறை, ஸ்கூல் ஆப் லைப் சையின்ஸ் துறைகள், தேசிய பெருங்கடல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது.கடல் உயிரினங்களின் ஆய்வு மற்றும் பயன்பாடு குறித்து கூட்டு ஆராய்ச்சியை உருவாக்க, புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் தேசிய பெருங்கடல் ஆராய்ச்சி நிறுவனம் (என்.ஐ.ஓ.டி.) இடையே புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டவர்களின் கூட்டம், வீடியோ கான்பிரன்சிங் மூலம் நடந்தது.துணைவேந்தர் குர்மீத்சிங், தேசிய பெருங்கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ஆத்மநாதத், பதிவாளர் சித்ரா, பேராசிரியர் பாலகிருஷ்ணன், இயக்குநர் ராஜிவ் ஜெயின் கலந்து கொண்டனர்.ஸ்கூல் ஆப் லைப் சையின்ஸ் டீன் தேவி பிரசாத், தேசிய பெருங்கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தரணி, பேராசிரியர் உமா சந்திரசேகரன், ஜோசப் செல்வின் ஆகியோர் கலந்துரையாடினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X