இந்தியா

கொரோனா சிகிச்சை மையத்தில்

Added : செப் 13, 2020
Share
Advertisement

காரைக்கால்; காரைக்காலில் தனியார் மருந்துவக் கல்லுாரி கொரோனா சிகிச்சை மையத் திற்கு போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வலியுறுத்தி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.காரைக்காலில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு பொது மருந்துவ மனையில் இட நெருக்கடி ஏற்பட்டது. அதனால், மாவட்ட நிர்வாகம் வினாயகா மிஷன் மருத்துவக் கல்லுாரியில் 300 படுக்கை வசதிகள் ஏற்படுத்த கல்லூரி நிர்வாகத்திடம் அறிவுறுத்தியது.அதில், 150 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. ஆனால் படுக்கை வசதி கொண்ட அறையில் போதிய கழிப்பறை வசதி இல்லை. நோயாளிகளை பரிசோதனை மேற்கொள்ள போதிய உபகரணங்கள் இல்லை. கடந்த ஓராண்டாக ஸ்கேன் பழுதடைந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் மத்திய பரிசோதனை கூடம் இயங்கி வரும் இடம் அருகில் கொரோனா பரிசோதனைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பிற நோயாளிகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.மேலும் மருத்துவமனை ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு, ஊக்கத்தொகை, பாதுகாப்பு உபகரணங்கள் வசதி ஏற்படுத்த வேண்டி, பணி குறித்து சரியான விபரம், கொரோனா வார்டில் பணிபுரியும் மற்ற ஊழியர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அண்ணா தொழிற்சங்கம் மற்றும் அனைத்து ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று சங்க தலைவர் ஜான்சன்ராஜ் ரமேஷ் தலைமையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X