பொது செய்தி

தமிழ்நாடு

'பரிசோதனை செய்ய தயக்கம் வேண்டாம் !' 

Added : செப் 13, 2020
Share
Advertisement

கோவை:'காய்ச்சல், சளி அறிகுறி இருப்பவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய தயக்கமின்றி முன்வரவேண்டும்' என, கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை வழக்கத்தை காட்டிலும் சற்று குறைந்துள்ளது. மண்டல அளவில் கண்காணிப்பு குழுக்கள், மருத்துவ முகாம், வீடு வீடாக ஆய்வு என மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கலெக்டர் ராஜாமணி கூறுகையில்,''நாள் ஒன்றுக்கு பரிசோதனை எண்ணிக்கை, 8,500 என்ற அளவில் அதிகப்படுத்தப்பட்டுள்ளது; அதில், 6,000 பரிசோதனை மாநகராட்சி பகுதிகளுக்குள் எடுக்கப்படுகிறது. தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறியுள்ளவர்கள், தயக்கமின்றி பரிசோதனை செய்ய முன்வரவேண்டும். மாவட்ட, மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்தால் பரிசோதனை வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X